பரம்பொருள் நீயே.........
பல்லவி
பரம்பொருள் நீயே பரமனும் நீயே
அறம் பொருளின்பம் அனைத்தும் நீயே
அனுபல்லவி
மரம் தரும் நிழல்தனைப் போலவும் நீயே
வரம் தரும் கருணைக் கடலும் நீயே
சரணம்
அரும் பெரும் தவங்கள் புரிந்திட அறிந்திலேன்
வருத்திடும் நோன்புகள் செய்திலேன் ஆயினும்
சிரமம் தரும் பவக்கடல் கடந்திட நினைந்து
கரம் சிரம் பணிந்துனை கேசவா வேண்டினேன்
இராகம் : வகுளாபரணம்
தாளம் : கண்ட சாபு
No comments:
Post a Comment