தீனசரண்யனே ராகமாலிகை
நாதநாமக்ரியா
தீனசரண்யனே கோவிந்தா
தினமுனைப் பணிந்தேன் கோவிந்தா
கானமியற்றியே கோவிந்தா
பாடித் துதித்தேன் கோவிந்தா
சண்முகப்ரியா
ஞானமும் பக்தியும் கோவிந்தா
நானுனை வேண்டினேன் கோவிந்தா
ஆனந்த கேசவ கோவிந்தா
ஆதி மூலமே கோவிந்தா
ஹம்ஸானந்தி
வானமும் பூமியும் கோவிந்தா
வாழ்த்திடும் நாமமே கோவிந்தா
தேனாக இனிக்கும் கோவிந்தா
திருநாமம் போற்றினேன் கோவிந்தா
காபி
தானாகவே வந்து கோவிந்தா என்
தாபம் களைந்தாய் கோவிந்தா
மாதவ முரளி கோவிந்தா
மதுசூதனனே கோவிந்தா
No comments:
Post a Comment