மதுசூதன......
பல்லவி
மதுசூதன மனமோகன தீனதயாளா
மனம் கனிந்தென் துயர் களைந்திடு நீ அருளாளா
அனுபல்லவி
கதியென நானுனைப் பணிந்தேன் பொன்மலர்த் தாளா
எதிர்பவர்க்கும் தயவளிக்கும் ரகுகுல பாலா
சரணம்
விதிப்படித்தான் நடக்குமெனில் உன்னருளெதற்கு
மதி படைத்தவர் கேட்கிறார் மதி கொடுத்தவனே
நிதி கொடுத்தால் எதும் நடக்கும் மண்ணுலகினைப் போல்
விதியுமுண்டோ விண்ணுலகில் கேசவனே சொல்
இராகம் : சித்ராம்பரி
தாளம் : சாபு
No comments:
Post a Comment