ஆஞ்சநேயரின்....
பல்லவி
ஆஞ்சநேயரின் அழகிய திருவடி
பணிந்து நான் வேண்டினேன் — ஶ்ரீ
அனுபல்லவி
வாஞ்சையுடன் ஶ்ரீ கோதண்ட ராமனை
வணங்கியே நிற்கும் — ஶ்ரீ
சரணம்
பாஞ்ச ஜன்னியம் முழங்கிடும் கண்ணன்
பாரினில் ராமனாய் விளங்கிய போதவர்
இராகவன் திருவடி நீங்காதிருந்தமை போல்
அடியவன் கேசவன் அவர் தம் திருவடி
(துரிதம்)
அருகினில் என்றும் நீங்காதிருக்க
வரம் தர வேண்டி வாயுகுமாரன்
இராகம் : அசாவேரி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment