மஹாலக்ஷ்மி......
பல்லவி
மஹாலக்ஷ்மி மாதா
மனம் கனிந்தருள் தா
அனுபல்லவி
தகாதவனோ நான் உன்னருளைப் பெற்றிடவே
முகாரவிந்தம் ஏன் மறைத்துக் கொண்டாயோ
சரணம்
இகபரமிரண்டிலும் புகலிடம் நீயே
ஜகமெலாம் புகழும் அஷ்டலக்ஷ்மித் தாயே
என்னிருள் நீங்க உன்னருள் வேண்டினேன்
கேசவன் துணைவியே காத்தருள்வாயே
இராகம் : ஹம்ஸநாதம்
தாளம் : ஆதி
No comments:
Post a Comment