நாமமொன்றே.....
பல்லவி
நாமமொன்றே போதுமே நான்மறை போற்றும்
கேசவா உன்றன் நாமமே போதுமே
அனுபல்லவி
ஓமெனும் ப்ரணவ உட்பொருள் ஓதிய
ஸ்வாமிநாதனின் மாமனே கேசவா
சரணம்
பாமர ஜன பரிபாலன முரஹர
சாமளநிற சுகுமாரனே கேசவ
மாமறை புகழ் தாமரைப்பத
ராவணவத ரகு ராமனே கேசவ
சாமரம் வீசி பணிவிடை செய்யும்
செங்கமலம் போற்றும் சென்ன கேசவ
பூமலர் தூவியுன் பாதம் பணிந்தேன்
காமனை வென்றிடக் கேசவா உன்றன்
இராகம் : பைரவி
தாளம் : சாபு
No comments:
Post a Comment