தந்தை தாய்.......
பல்லவி
தந்தை தாய் குருவென அனைத்தும் நீயே
வந்தனை செய்துன் மலரடி பணிந்தேன்
அனுபல்லவி
முந்தைய பழவினை தொலைந்திட வேண்டினேன்
சிந்தை குளிர்ந்தருள் செய்குவாய் கேசவா
சரணம்
வெந்த புண்ணில் வேலையே பாய்ச்சிடும்
சொந்தங்கள் நிறைந்த தந்திர பூமியில்
மந்தையில் உழன்றிடும் ஆடுபோல் வாழ்ந்திடும்
அந்தகன் எனையே ஆண்டருள் கேசவா
இராகம் : சிவசக்தி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment