அடிமை நானுனது.......
பல்லவி
அடிமை நானுனது அடியிணை தொழுதேன்
ஆட்கொண்டருள்வாய் சென்ன கேசவா
அனுபல்லவி
விடிவு காலம் வேண்டியே பணிந்தேன்
பவவினை தொலைந்திட பரிந்தருள் புரிவாய்
சரணம்
கசிந்துனை வேண்டியே கஜராஜன் ஒருமுறை
ஆதிமூலமே என்றழைத்ததும் காத்தாய்
நெடிதுயர் மாலே கேசவா யானும்
இன்னிசை பாடியுன் திருவடி பணிந்தேன்
இராகம் : ரிஷபப்ரியா
தாளம் : ஆதி
No comments:
Post a Comment