ஒருதரம்..........
பல்லவி
ஒரு தரம் கேசவா என்றழைத்தால் போதும்
அருகினில் வருவான் அருள்மழை பொழிவான்
அனுபல்லவி
கருமங்கள் செய்தொரு பயன் கருதாமல்
திருமகள் மனம் மகிழ் முகுந்தனைப் பணிந்து
சரணம்
வாமத்தில் தேவியை வைத்தவன் பணியும்
தாமோதர மாதவ கேசவன் அவனே
காமனையீன்றவன் காருண்ய மூர்த்தி
காமத்தை வென்றவன் நாமத்தை நாவால்
இராகம் : ஆபோகி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment