பவனி வரும்..........
பல்லவி
பவனி வரும் சென்ன கேசவனைப் பார்த்து
அவனி முழுவதுமே அதிசயித்ததார்த்து
அனுபல்லவி
புவனமனைத்தையும் தன்னுள்ளே வைத்து
கவனமுடன் போற்றிக் கனிவுடனே காத்து
சரணம்
நவரத்தினம் பதித்த பொற்கிரீடம் சோபையுடன்
தவளம் மரிக்கொழுந்து சேர்த்த மலர் மாலையுடன்
பவளம் முத்துக்கள் கோர்த்த மணி மாலையும்
உவகையுடன் தரித்து உல்லாசமாய் பல்லக்கில்
பூதாம்பரமணிந்து நாதஸ்வர இசை முழங்க
வேதியர்கள் மறையோத பாகவதர் பாட்டிசைக்க
தேவியர் இருபுறம் வீற்றிருக்க பார் புகழ
கோலாகலமாக கருடாழ்வார் முன் செல்ல......
இராகம் : கதனகுதூகலம்
தாளம் : ஆதி
No comments:
Post a Comment