நீலவண்ணக்கண்ணன்......
பல்லவி
நீலவண்ணக்கண்ணன் கோலாகலமாக
ஆலமுள்ள காளிங்கன் தலை மீது நடமாடுமழகை பாரீரோ பாரீர்
அனுபல்லவி
ஆலிலைபாலன் வேணுகோபாலன்
நூலினைப் போலவே வாலினைப்பிடித்து பாம்பினைத்தன்வசப்படுத்தியே நின்று
சரணம்
கோலமிகு கொண்டை சாய்ந்து கலைந்தாட
காதிரண்டில் மகரக் குண்டலங்களாட
தாளமுடன் தண்டைகள் பாலனவன் காலில்
கொஞ்சும் சிலம்பொலியும் சேர்ந்து அசைந்தாட
(கண்ட நடை)
அலைகடலும் குதிபோட்டு ஜதிசேர்ந்து ஆட
பார்த்திருந்த தேவர்களும் பரவசத்திலாட
பதினான்கு லோகங்களும் மூவுலகுமாட
கோபியர்கள் தனைமறந்து மனம் களித்து ஆட
இராகம் : மலயமாருதம்
தாளம் : ஆதி
No comments:
Post a Comment