உன்னை........
பல்லவி
உன்னை நினைந்துருகும் என்னைக் காக்க
இது தருணம் வருவாய் கேசவா
அனுபல்லவி
அன்னை தந்தை குருவனைத்தும் நீயென்றுன்னை நம்பினேன்
பொன்னைப் பொருளை பூவையரை வெறுத்தொதுக்கி
சரணம்
தன்னந்தனியனாய் என்னை நானுணர்ந்தேன்
உன்னை என்னுள்ளே ஒன்றாய் நான் கண்டேன்
இன்னும் இடையிடையே ஏனிந்தத் திரை மாயை
செங்கமலத்திருமார்பா என் சென்ன கேசவா
இராகம் : ஷட்விதமார்கிணி
தாளம் : சாபு
No comments:
Post a Comment