உன் நாமம்........
பல்லவி
உன் நாமம் பலவெனினும் ஒன்றேனும் இன்றேனும்
சொன்னாலும் சுவையூறும் சுகம் பலவும் கூடி வரும்
அனுபல்லவி
பொன்னாலும் பொருளாலும் பெறவியலா பேரின்பம்
தன்னாலே தேடி வரும் என்னாளும் எப்போதும்
சரணம்
முன்னால் நாம் செய்த பழவினைகள் தொலைந்திடும்
பின்னாலினிப் பிறவா பெரும் பேறு சேர்ந்திடும்
என்னால் தான் முடியுமெனும் அகந்தை அழிந்திடும்
உன்னால் தான் எல்லாமே என்றெண்ணிக் கேசவா
இராகம் : கரஹரப்ரியா
தாளம் : ஆதி
No comments:
Post a Comment