கெஞ்சுகிறேன்.......
பல்லவி
கெஞ்சுகிறேன் கண்ணா கண்ணெதிரில் உனைக்காண
நெஞ்சமெல்லாம் நெகிழ்நதுருக உன் புகழைப் பாடுகிறேன்
அனுபல்லவி
பஞ்ச பாண்டவர் தம் பக்கம் இருந்தன்று
வெஞ்சமரில் கேசவனே சாராதியாயிருந்த உன்னை
மத்திம கால சரணம்
கொஞ்சும் சிலம்பொலிக்க கொண்டை அசைந்தாட
தக்கிட திமிதக தக்கிட திமியுனெ கூடவே ஜதியோடு
தண்டைகளாட பிஞ்சுக் காலகடுத்து அஞ்சனவண்ணன்
மிஞ்சும் எழிலோடு கோகுலம் தன்னில் வஞ்சிடை கோபியர் தன்வசமிழந்து
தஞ்சம் தஞ்சமென நிற்கும் வண்ணம் நடமாடும் வேணுகோபாலா உன்னை
இராகம் : ஹிந்தோளவசந்தம்
தாளம் : ஆதி
No comments:
Post a Comment