அனைத்தும் கேசவன்
“இராகமாலிகை”
கரகரப்ரியா
வாசமலரில் நறுமணம் கேசவன்
வீசு தென்றலில் சுகமே கேசவன்
பவப்ரியா
ஆசு கவியினில் பொருளே கேசவன்
பேசு மொழிதனில் சொல்லே கேசவன்
நாடகப்ரியா
இன்னிசைப் பண்ணில் நாதம் கேசவன்
மண்ணில் விளையும் பயிரும் கேசவன்
ரிஷபப்ரியா
கண்ணில் தெரியும் காட்சியே கேசவன்
பெண்ணின் அழகில் நாணம் கேசவன்
சிட்டை ஸ்வரம் போட்டுக் கொள்ளவும்
ரிஷப ப்ரியா
(ஸ்நீதாபபா பமாகாரிகா கமாபாதநீ நிஸா ரிகரிஸா)
நாடகப்பிரியா , பவப்ரியா ,கரகரப்ரியா...... ( வாச மலரில்....)
பசுபதிப்ரியா
புல்லாங்குழலில் இசையும் கேசவன்
அல்லும் பகலும் அனைத்தும் கேசவன்
ராம்ப்ரியா
சொல்லும் செயலும் அனைத்தும் கேசவன்
நல்லதும் தீயதும் யாவும் கேசவன்
சுமனப்ரியா
திங்களின் பானுவின் ஒளியே கேசவன்
மங்கல விளக்கின் சுடரே கேசவன்
சண்முகப்ரியா
பங்கய பாதம் பணிபவன் கேசவன்
மங்களமனைத்தும் அளிப்பவன் கேசவன்
சுமனப்ரியா, ராம ப்ரிய, பசுபதிப்ரியா
ராகங்களில் சிட்டை ஸ்வரம் அமைத்துக்கொள்ளவும்.
No comments:
Post a Comment