வேதனை......
பல்லவி
வேதனை தீர்க்கும் வேதவல்லியுன்
பாதம் பணிந்தேன் எந்தன் தல்லி
அனுபல்லவி
சாதனை ஏதும் நான் செய்யவில்லையுன்
நாதனைப் போற்றியே பாடி வந்தேன்
சரணம்
மாதுனை மார்பினில் வைத்திருக்கும்
மாதவன் கேசவன் அவன் மகிழ்ந்துன்
காதினைக் கொடுத்து என்றன் பாட்டை
நான் படும் பாட்டைக் கேட்டிடச் சொல்வாய்
இராகம் : கமலாமனோகரி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment