ஆயிரம் பெயர்....
பல்லவி
ஆயிரம் பெயர் சொல்லி நானழைத்தேனே
ஆயினும் அருளில்லையா கண்ணா...
அனுபல்லவி
பாயிரம் பலவும் நான் பாடித் துதித்தேனே
பாவியென் குரலுன்றன் காதில் விழவில்லையா
சரணம்
ஆலிலை தன்னில் நீ உறங்குகின்றாயோ
ஆய்ச்சியர் அழகினில் மயங்கி நின்றாயோ
ஆவியும் உடலுமென் அனைத்தையும் உனக்கே
ஆகுதி செய்குவேன் கேசவா காத்தருள்
இராகம் : ஸ்வரணாங்கி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment