ரெங்கா ரெங்கா....
பல்லவி
ரெங்கா ரெங்காவென்றுனைக் கூவியழைத்தேனே தேனேயுன்
பங்கய பதம் பணிந்து பாடியழைத்தேனே
அனுபல்லவி
உன்காதில் என் குரல்தான் விழவில்லையா தயவில்லையா
மங்காத புகழ் மேவும் திருவரங்கப்பெருமாளே அருளாளா
சரணம்
பெண்ணாசை பேராசை பொன்னாசைப் பொருளாசை
கொண்டுழலும் என்னாசைப் பிணிதீர யான் கடைத்தேற
இராகம் : காம்போஜி
தாளம் : ஜம்பை
No comments:
Post a Comment