கனவிலும்.....
பல்லவி
கனவிலும் நினைவிலும் கேசவன் நாமம்
கனிவுடன் நினைந்திடப் பழகிடு மனமே
அனுபல்லவி
தனம் புகழ் காமம் எனும் சுகம் தேடி
வனவிலங்கினைப் போல் அலைந்திடும் மனமே
சரணம்
இனம் மதம் மொழியெனும் வேற்றுமை களைந்து
வினையிரண்டழிந்திட பிறப்பிறப்பொழிந்திட
அனவரதமுமே அவன் புகழ் பாடி
அனைவரும் சுகம் பெற அனுதினம் வேண்டி
இராகம் : கரகரப்ரியா
தாளம் : ஆதி
No comments:
Post a Comment