பொல்லாதவன்..........
பல்லவி
பொல்லாதவன் கண்ணன் புல்லாங்குழலூதி
கல்லான மனங்களையும் கரைந்துருகச் செய்திடுவான்
அனுபல்லவி
சொல்லாமல் கேசவனும் கோபியரின் பின் சென்று
இல்லாத குறும்பெல்லாம் இயல்கபாகச் செய்திடுவான்
(திச்ர நடை)
உல்லாசமாயவனும் சல்லாபமாய்ப் பேசி
கோபியர்கள் மனம் மயங்க லீலைகள் புரிந்திடுவான்
சரணம்
கள்ளத்தனமாக இல்லங்களில் புகுந்தவனும்
பால் தயிர் வெண்ணைதனை திருடியே உண்பான்
பிள்ளையவன் பிடி பட்டால் முல்லைப் பல் காட்டி
வெள்ளைப் புன்னகையால் உள்ளத்தைக் கொள்ளை கொள்வான்
கண் சிவந்தே தாயவளும் கவலையுடன் கடிந்தால்
வாய்திறந்து மூவுலகும் தன் வாயுள் காட்டிடுவான்
இராகம் : சுத்த தன்யாசி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment