அபிராமி அந்தாதி:
உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிசெஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்குநுண்ணூல்
இடையாளை, எங்கள்பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. (84)
சடையோனிடப்பாகம்......
பல்லவி
சடையோனிடப் பாகம் அமர்ந்த அன்னையை
கடைக்கண் வைத்தெனைக் காத்தருள வேண்டினேன்
அனுபல்லவி
உடை பட்டுடுத்திய நிலவணிந்த சடையாளை
குடையாகக் குன்றேந்திய கேசவன் சோதரியை
சரணம்
விடை வாகனனின் மனங்கவர் காமேச்வரியை
இடை நூலென விளங்கும் சிவகாம சுந்தரியை
இடைஞ்சல் தருமென் பழவினைகள் நீக்கியெனை
படையா வண்ணம் செய்திட வேண்டுமென
No comments:
Post a Comment