ஷீரஸாகர.........
பல்லவி
ஷீரஸாகர கன்யா லக்ஷ்மி உனைப் பணிந்தேன்
கோர சம்ஸாரக் கடலினைக் கடந்திட நினைந்தே
அனுபல்லவி
ஆராவமுதன் கேசவன் தன் அழகுத் திருமார்பையலங்கரிக்கும்
மாறனையீன்ற மயூரவல்லி பேயாழ்வார் போற்றிய
சரணம்
மரகதவளைக்கரமும் கரமேந்தும் தாமரையும்
நிலைத்த நிதியளிக்கும் நித்யானந்த ரூபமும்
பதித்த மாணிக்க அணிகலனும் பட்டுடையும் தரித்து
அழகுடன் ஸ்வேத த்வீபத்தில் வீற்றிருக்கும்
இராகம் : யதுகுலகாம்போதி
தாளம் : சாபு
No comments:
Post a Comment