கேசவன் தரிசனமே......
பல்லவி
கேசவன் தரிசனமே தருமே
மனதிற்கு கோடி இன்ப சுகமே சென்ன
அனுபல்லவி
வாசமலர் பலவும் கலந்த பூ
மாலைகள் புனைந்து பொலிவுடன் விளங்கும்
சரணம்
ஆசையுடன் திருத்தங்கும் அழகிய மணிமார்பும்
வீசுமொளி பொங்கும் ஆதவனும் கூசும்
துரிதம்
தேசுடைத் திருமேனி எழில் கொஞ்சும்
மாசிலா மதி வதனமுடன் திகழும்
இராகம் : கோகிலப்ரியா
தாளம் : ஆதி
No comments:
Post a Comment