நாதன் அவனன்றி ........
பல்லவி
நாதன் அவனன்றி நானிலத்தில் யாருளார்
நாதோபாசனை புரிந்திடும் கேசவன் எனையே காக்க
அனுபல்லவி
பாதம் பணிந்திடும் பக்தரைக் காக்கும்
பரமதயாளன் கருணாமூர்த்தி காக்கும் கடவுள் கலியுகந்தனில் ஜகந்
சரணம்
வேதம் ஓதியும் வேதியர் கூடி வேள்விகள் செய்தும்
வாதம் புரிந்து ஆதி மதமென சாதித்த போதும்
மாதரை மற்றும் காமசுகங்களை மனத்தினில் விரும்பும்
பாதகம் செய்து யாதொரு பயனும் அடையாதவர்க்கும்
இராகம் : வலஜி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment