நாதமே......
பல்லவி
நாதமே என்றன் நாதனின் ரூபம்
வேதமே போற்றும் ஓங்கார சப்த
அனுபல்லவி
ஆதியும் அந்தமும் இல்லாத முதல்வனின்
நாவினில் தோன்றிய ஸ்வர ராக சங்கீத
சரணம்
சாதகம் புரிந்திடும் பாடகன் பாடலில்
மோதும் அருவியில் பறவைகள் ஒலியில்
யாதவன் கேசவன் ஊதும் குழலில்
சீதக் கடலலை ஓசையில் பிறக்கும்
இராகம் : கல்யாணவசந்தம்.
No comments:
Post a Comment