கேசவன்........
பல்லவி
கேசவன் நீயிருக்க பிறிதோர் தெய்வ
ஆசை எனக்கெதற்கு அச்சுதா மாதவா
அனுபல்லவி
பாசமும் நேசமும் காசினி அனைத்தும்
மாயையென்றறிய உன் மலரடி பணிந்தேன்
சரணம்
புருஷன் ப்ரகிருதி புலப்படும் பொருளெல்லாம்
உள்ளும் புறமும் அனைத்தும் நீயென
அறிந்திடும் நிலை யான் அடைந்திட வேண்டும்
ஆனந்த வாழ்வினை அளித்திடல் வேண்டும்
இராகம் : ஜோதிஸ்வரூபிணி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment