தினமுனை......
பல்லவி
தினமுனை நினைக்கும் வரமருள்வாய் ராமா
ஜனகனின் மகளை ஜானகியை மணந்தவனே
அனுபல்லவி
அனங்கனை பிரமனை படைத்த கேசவனே
வனம் சென்று தந்தையின் சொல் காத்த தனயனே
சரணம்
தினகர குலத்தோனே தீனசரண்யனே
சனக சனந்தன முனிவர்கள் பணிபவனே
நிலவினைப் பழிக்கும் அழகிய முகத்தோனே
மாமறைகள் போற்றும் தாமரைப் பாதனே
புன்னகையுடன் திகழும் வதனமுடையவனே
அன்னை கோசலைக்கு மகிழ்ச்சியளிப்பவனே
முன்னம் சபரிக்கு மோட்சமளித்தவனே
இன்னும் அகலிகையின் சாபம் தீர்த்தவனே
விரைந்து கடல் கடந்து இலங்கை சென்று
அரக்கன் ராவணனின் கதை முடித்து
வீடணன் மகிழ மணிமுடிசூட்டி
அன்னை சீதையை சிறை மீட்டவனே
அனுமனும் கருடனும் அருகிருந்து பணியும்
அனந்தசயனனே அயோத்தி மன்னனே
வினைப்பயனால் நான் படுந்துயர் நீங்கவும்
அனைத்து நலன்களும் நற்கதி பெறவும்
No comments:
Post a Comment