கேசவன் பாதாதி கேசம்
இராகமாலிகை
பௌளி ராகம்
வேதப் பொருளே கேசவா என்
வேதனை தீர்ப்பாய் கேசவா
நாத இன்பமே கேசவா
நாராயணனே கேசவா
துரிதம்
ஆதி மூலமே கேசவா புவியனைத்தும் நீயே கேசவா
ஆராவமுதனே கேசவா அன்பர்க்கன்பனே கேசவா
சிட்டை ஸ்வரம்
ஸா ;; ரீ ; கா பா தா கா ; ; பா ; தா ஸா ரீ
க பா கா ரீ ஸா ஸ்நிநித தப பக கதாதாபகா கபதப கரிஸரி
தன்யாசி ராகம்
ஜனனம் மரணம் கேசவா
களையும் சரணம் கேசவா
தனமும் குணமும் கேசவா கேசவா
அருளும் சரணம் கேசவா கேசவா
துரிதம்
தினமும் வணங்கும் கேசவா சரணம் சரணம் கேசவா
மனமும் களிக்கும் கேசவா சரணம் சரணம் கேசவா
( சிட்டை ஸ்வரம் )
மோகன ராகம்
பாதம் கமலம் கேசவா
சரணம் சரணம் கேசவா
துரிதம்
நிதம்பம் சுந்தரம் கேசவா
சரணம் சரணம் கேசவா
( சிட்டை ஸ்வரம் )
கல்யாண வசந்தம் ராகம்
நாபி கமலம் கேசவா சரணம் சரணம் கேசவா
பிரமன் வாசம் கேசவா சரணம் சரணம் கேசவா
(சிட்டை ஸ்வரம் )
கல்யாணி ராகம்
ஹ்ருதயம் பத்மம் கேசவா
சரணம் சரணம் கேசவா
துரிதம்
லக்ஷ்மி வாசம் கேசவா
சரணம் சரணம் கேசவா
( சிட்டை ஸ்வரம்)
சண்முகப்ரியா ராகம்
துளபம் கௌஸ்துபம் கேசவா
சரணம் சரணம் கேசவா
துரிதம்
கழுத்தலங்காரம் கேசவா
சரணம் சரணம் கேசவா
சுத்த தன்யாசி ராகம்
புவனம் விழுங்கும் கேசவா
சரணம் சரணம் கேசவா
திருவாய் பவளம் கேசவா
சரணம் சரணம் கேசவா
ஸாரமதி ராகம்
மலரிதழ் இரண்டும் கேசவா
சரணம் சரணம் கேசவா
துரிதம்
மதுரம் மதுரம் கேசவா
சரணம் சரணம் கேசவா
( சிட்டை ஸ்வரம் )
அம்ருதவர்ஷணி ராகம்
மயிலிறகணியும் கேசவா
சரணம் சரணம் கேசவா
துரிதம்
கேசபாசம் கேசவா
சரணம் சரணம் கேசவா
(சிட்டை ஸ்வரம்)
ஶ்ரீ ராகம்
மன்மத ரூபம் கேசவா
சரணம் சரணம் கேசவா
துரிதம்
சென்னகேசவன் கேசவா
சரணம் சரணம் கேசவா
( சிட்டை ஸ்வரம்)
No comments:
Post a Comment