மாமயிலை.......
பல்லவி
மாமயிலைக் கேசவன் மனம் மகிழ வந்துதித்த
ஶ்ரீமயூரவல்லியுந்தன் மலர்ப் பதம் சரணடைந்தேன்
அனுபல்லவி
தாமரைப்பூ கையிலேந்தி தாமரையில் வீற்றிருக்கும்
தாயே ப்ருகு முனிவர் சேயே பேயாழ்வார் தொழும்
சரணம்
தாயினும் பரிந்தருள் தயைநிதியே நிதியளிக்கும்
தனலக்ஷ்மி யுனைப் பணிவோர் பாவச்சுமைகளையே
கடைக்கண் பார்வையினால் களையும் பார்கவி
மாதா கேசவன் துணைவியே......
இராகம் : கன்னட
தாளம் : ஆதி
No comments:
Post a Comment