ஒரு நாளும்......
பல்லவி
ஒரு நாளும் நானுனை மறவாதிருக்க
பெருமாளே ஒரு வரம் நீ தர வேண்டும்
அனுபல்லவி
திருவின் நாயகனே சென்ன கேசவா
திருமாலே என்றழைத்து தினம் தினம் உனைத்துதிக்க
சரணம்
கருதாமலே மனம் ஐம்புலன் வழியே
இரும்பினைக் கவரும் காந்தம் போலவே
ம.காலம்
பெரும் புகழ் போகம் தேடிச் செல்வதை
நிறுத்தியே உன்னிரு திருவடி நினைந்திட
இராகம் : தோடி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment