சாரதியே.......
பல்லவி
சாரதியே உன் கருணை ஊரறிந்த உண்மையன்றோ
பாரதப் போர் நடத்த பார்த்தனுக்குத் துணை நின்ற
அனுபல்லவி
நாரதரும் நான்முகனும் நான்மறையும் புகழும்
கார்முகில்வண்ணனே பார் போற்றும் கேசவனே
சரணம்
கோரச்செங்கண்ணா உக்கிரமாய்ப் பார்,த்தாலும்
ஈர நெஞ்சுடையாய் தீரா வினைதீர்ப்பாய்
சாரமில்லா சம்சார வாழ்க்கையே சதமென்று
தீராத பந்தத்தில் மூழ்குமெனைக் கரைசேர்ப்பாய்
இராகம். : ஸரஸாங்கி
தாளம் : க. சாபு
No comments:
Post a Comment