கண் படைத்த........
பல்லவி
கண் படைத்த பயனடைந்தேன் காமாக்ஷியுன்
கண்ணொளியைக் கண்டு கொண்டேன்
அனுபல்லவி
மண்ணுலகில் பிறந்துன் தரிசனம் காணப்
புண்ணியம் செய்தேன் என எண்ணி மனம் களித்தேன்
பண் இசைத்துப் பரவசித்தேன்
சரணம்
விண்ணுலகத்திந்திரனும் தேவர்களும் முனிவர்களும்
கண்ணெதிரிலுனைக் காணத் தவம் புரிந்து காத்திருக்க
எண்ணுதற்கும் எட்டாத தொலைவில் யான் நின்றும்
கனிவுடனே காஞ்சியிலே காட்சி தந்தாய் சென்ன கேசவன் சோதரி
இராகம் : பூர்வி கல்யாணி
தாளம் : விலோம சாபு
No comments:
Post a Comment