தந்தை தாயுமே.......
பல்லவி
தந்தை தாயுமே நீயல்லவோ
எந்தன் சொந்தமே சென்னகேசவா
அனுபல்லவி
பந்துவும் நீயே தோழனும் நீயே
ஆதிமூலமே ஆராவமுதே சிந்தையில் வைத்துன் சீரடி போற்றினேன்
சரணம்
எந்தையே ஏழையேன் செய்த புண்ணியம்
உன் தயை நாடும் உத்தமர் வரிசையில்
நின்றிடும் பாக்கியம் கேசவன் பெற்றேன்
விந்தையே உன் செயல் வியந்து போற்றினேன்
இராகம் : கன்னட கௌளை
தாளம் : ஆதி
No comments:
Post a Comment