சொன்ன சொல்........
பல்லவி
சொன்ன சொல் காக்கும் கண்ணன் நீயல்லவோ
என்னருஞ்செல்வமே சென்ன கேசவா
அனுபல்லவி
உன்னருள் இன்றி இவ்வுலகமியங்குமோ
கன்னலே தேனே கலியுக க்கடவுளே
சரணம்
தின்ன ஒரு பிடி அவல் தந்த குசேலன்
என்ன வென்றறியா வண்ணமே செய்தனை
துரிதம்
உன்னையே சதமென எண்ணிடும் கேசவன்
என்னையும் காத்தருள் புரிந்திட வேண்டினேன்
இராகம் : பிலஹரி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment