மனமே தினம் ........
பல்லவி
மனமே தினம் பணிவாய் சென்னகேசவன் மலர்ப் பாதம்
அனுபல்லவி
வனமே இவ்வுடல் வனவிலங்குகளே ஐம்புலனகள்
மனம் போல் திரிந்திடும் இவைகளையடக்கி ஒருநிலைப் படுத்திட
சரணம்
இனிமேலும் பழி பாவம் செய்தொழிந்த வாழ்நாளை எண்ணி எண்ணிப் புலம்பாமல்
பனிபோல பழவினைகள் தானாகத் தொலைந்திட பிறப்பு பிறப்பில்லா பேரின்ப
[நிலை பெற
இராகம் : பிருந்தாவன சாரங்கா
தாளம் : சதுரஸ்ர அடை
No comments:
Post a Comment