மலர்மாலையலங்காரம்......
பல்லவி
மலர் மாலையலங்காரம் கலையாத சிங்காரம்
பலர் காண மலர்நாபன் பவனி வரக்கண்டேன்
அனுபல்லவி
ஒளிவீசும் எழில் கொஞ்சும் கருநீலவண்ணன்
திருநாளில் திருமார்பன் திருமேனி கண்டேன்
சரணம்
மலர் கரத்தில் வெண்சங்கம் மலர்க்ரீடம் பரிவட்டம்
மலர்ந்த திருமுகம் மந்தகாசம் கமலச்செங்கண்
குளிரமதிவதனமும் பவளவாயும் கொண்ட மாலவன் திருமாலவன்
மலர்ப் பதம் கேசவன் பணிந்து திருக்கண்டேண் திருவல்லிக்கேணி கண்டேன்
இராகம் : உசேனி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment