அம்பிகையே......
பல்லவி
அம்பிகையே காமாக்ஷி அருள்புரிவய் தாயே
நம்பின பேர்க்கருளும் இகபரமிரண்டிலும்
அனுபல்லவி
உம்பர் தொழும் தேவி உமையே கௌரியுன்
செம்பொற் கழலடி அன்புடன் பணிந்தேன்
சரணம்
தெம்புடன் தேகம் விளங்கிய வேளையில்
வம்பிலும் வழக்கிலும் வாழ்நாள் கழித்தேன்
இன்பம் இதுவென இயம்பித் திரிந்தேன்
தும்பை விட்டு வாலைப் பிடித்தது போலுமே
ம.காலம்
எம்பும் தோலுமே தளர்நதபின்னிறுதியில்
துன்பமிதுவென அறிந்து தெளிந்தேன்
அம்புலியணிந்த சங்கரன் துணையே
அன்புடன் ஆதரி கேசவன் சோதரி
இராகம் : ஹேமவதி தாளம் : ஆதி
No comments:
Post a Comment