ஶ்ரீ வேங்கட.......
பல்லவி
ஶ்ரீவேங்கட கிரிவாசன் ஶ்ரீநிவாசன்
மங்கை அலமேலு மணவாளன் தாள் பணிந்தேன்
அனுபல்லவி
தேவாதி தேவன் ஆலகாலமுண்ட கண்டன்
காதல் கொண்ட மோகினி ரூபன்
சரணம்
ஊழ்வினையால் தாம் செய்த பாழ்வினைப் பயன் தொலைய
ஆழ்ந்த பக்தியுடன் அவனருளை யாசிக்கும்
ஏழைகளுக்கருளும் ஏழுமலையான் கோவிந்தன்
ஏழேழ் பிறவிக்கும் கேசவனென் கலிதீர்க்க
இராகம் : லலிதா
தாளம் : சாபு
No comments:
Post a Comment