ஆனந்த........
பல்லவி
ஆனந்த கோவிந்தன் திருநாமம் தனையே
ஆனந்தமாய் பஜனை செய்வாய் மனமே
அனுபல்லவி
தேனந்தத் திருமாலின் திருநாமமே
ஏனிந்தப் பாழுலகின் எண்ணங்கள் இன்னும்
சரணம்
தானந்தமில்லாத தீனசரண்யன்
வானளந்த விண்ணளந்த வாமன ரூபன்
ஊனுயிரும் தந்ததந்த பரம்புருஷன்
கோனந்தக் கேசவன் மூவுலகிற்கெல்லாம்
இராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி (அ) ஏகதாளம்
No comments:
Post a Comment