தங்கமயமானவளே.......
பல்லவி
தங்கமயமானவளே செங்கமலவல்லி
மங்களமாய் எங்களையும் காத்தருள்வாய் தல்லி
அனுபல்லவி
திங்கள் திருமுகத்தாள் திருவென்னும் பெயராள்
தங்கும் பொருள் தருவாள் தனிக் கருணை பொழிவாள்
சரணம்
இங்குமங்கும் அலைபாயும் மனக்குரங்கையடக்கி
பொங்கும் மூவாசைப் பிணிதனையே களையும்
சங்கும் சக்கரமும் கையிலேந்தும் கேசவனின்
பங்கய மலர் மார்பில் பொலிவுடனே கொலுவிருக்கும்
இராகம் : விச்வாம்பரி
தாளம் : க.சாபு
No comments:
Post a Comment