சரஸ்வதி நமஸ்துப்யம் ஸ்லோகம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
பொருள்: சரஸ்வதி - தேவி சரஸ்வதி!
நம: துப்யம் = நமஸ்துப்யம் - உனக்கு நமஸ்காரங்கள்.
வரதே - வரம் தருபவளே!
காமரூபிணி - வேண்டியவற்றைத் தருபவளே!
வித்யா ஆரம்பம் = வித்யாரம்பம் - கல்வித் தொடக்கத்தை
கரிஷ்யாமி - செய்கிறேன்
சித்தி: பவது மே சதா - அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!
சரணடைந்தேன் தேவி……
பல்லவி
சரணடைந்தேன் தேவி சரச்வதி கலைவாணி
வரமருள்வாய் வாணி வாகதீச்வரி
அனுபல்லவி
பரமேச்வரியந்த கேசவன் சோதரியும்
நரஹரி நாயகியும் பணியுமுனையே
சரணம்
பரதேவதையே பரம்பொருள் நீயே
கலைகள் கல்வி கற்கத் துவங்கும் முன்
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி உனையே துதித்தேன்
சிறப்புடனனைத்தையும் எனக்களித்திடுவாய்
No comments:
Post a Comment