காரணமேயில்லாமல்…….
பல்லவி
காரணமேயில்லாமல் கருணையளித்திடும்
ஆரணங்கே காமாக்ஷி மலர்ப் பதம் பணிந்தேன்
துரிதம்
அரனயனரியும் சுரபதி முனிவரும்
நரர் சுரர் நாரதரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
வாரணமுகனைப் படைத்தவளே ஈச்வரியே
நாரணன் கேசவன் சோதரியே நான்முகியே
சரணம்
ஆரணப் பொருளே அருமறைகள் போற்றும்
பூரணியே புரமெரித்த பஞ்சபாணப் பயிரவியே
மாரனுக்கருள் செய்த மனோன்மணியே
பாரோர் பணிந்தேத்தும் பராசக்தியே
No comments:
Post a Comment