கறைகண்டன் நாயகியே…..
பல்லவி
கறைகண்டன் நாயகியே காமாக்ஷியுனைப் பணிந்தேன்
கறை பிறவிப் பிணித்தீர எனக்கருள் புரிவாயே
அனுபல்லவி
குறையொன்றுமில்லாத கேசவன் சோதரியே
மறைபுகழும் மாதரசே மலையரசன் மகளே
சரணம்
இறைமகள் நீயே கலைமகள் அலைமகள்
அறம் பொருளின்பமனைத்துமளிப்பவள்
பிறையணிந்தவளே பேரழகே மாயே
வரையறையில்லாத வான் புகழ் கொண்டவளே
No comments:
Post a Comment