மாதவனே…..
பல்லவி
மாதவனே மதுசூதனேன கண்ணா
பாதம் பணிந்தேன் பவபயம் போக்கிடுவாய்
துரிதம்
ஆதித்தனம்புலி நாரதர் நான்முகன்
சாதித்த புண்ணியரிந்திரன் வணங்கிடும்
அனுபல்லவி
யாதவனே யது குலம் காத்தவனே
கீதையை ஓதிய மாயனே கேசவனே
சரணம்
கீத வாத்தியக் கலைகளின் ரசிகனே
வேதப் பொருளே ராதையின் காதலனே
மாதா தேவகியின் மணிவயிறு வாய்த்தவனே
ஓதக்கடல் நடுவே பள்ளிகொண்ட நாரணனே
No comments:
Post a Comment