சிவனுனையல்லால்…..
பல்லவி
சிவனுனையல்லால் வேறு யாரென் துணை
பவ பயம் நீக்கி இகபர சுகம் தரும்
துரிதம்
சிவகணங்கள் நந்தி நான்முகனிந்திரன்
சிவனடியாரனைவரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
புவனம் உண்டுமிழ்ந்த கேசவன் நேசனே
தவயோகி ஞானியர் துதித்திடுமீசனே
சரணம்
உவகையுடனுமைக்கு ஒரு பாதியளித்தவனே
நவரத்தினமென ஜொலிக்கும் நமச்சிவாயனே
அவனியில் விளையாடல் பல புரிந்தவனே
கவலை பிணியிடர் களைந்தெனைக் காத்தருள
No comments:
Post a Comment