வலி கொடுத்தெனையே……..
பல்லவி
வலி கொடுத்தெனையே சோதித்தாய் ஶ்ரீராமா
சலிப்படையேனுனதருளாலதையும் நான் பொறுப்பேன்
அனுபல்லவி
நலிந்தவரின் நலம் காக்கும் நாரணனே கேசவனே
வலிய வந்துன்னடியார்க்கு நலமருளும் பரந்தாமா
சரணம்
கலியின் லீலைகளால் அவனியோர் படுந்துயரை
எளிதில் உனையன்றி வேறு யார் தடுத்திடுவார்
மலிவு விலைச் சந்தையெனப் பெருகும் பக்தி வியாபாரம்
அலுப்படையச் செய்கிறதே அதற்கொரு வழி செய்வாய்
No comments:
Post a Comment