- You who as a boar split open the earth, went beneath the ocean
and brought up the earth goddess with beautiful spear-like eyes
when she was hidden by an Asuran
stay in Thiruveḷḷarai where mullai plants in the forest
climb on the sugarcane, seeming to smile
with their white buds and blossoms as bees drink their honey.
Give me your grace
மான வேலொண்கண் மடவரல் மண்மகள் அழுங்கமுந் நீர்ப்பரப்பில்,
ஏன மாகியன் றிருநில மிடந்தவ னேஎனக் கருள்புரியே,
கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண் முறுவல்செய் தலர்கின்ற,
தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு வெள்ளறை நின்றானே. (1372)
மான வேல் ஒண் கண் மடவரல்* மண்மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்*
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!* எனக்கு அருள்புரியே*
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி* வெண்முறுவல் செய்து அலர்கின்ற*
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்* திருவெள்ளறை நின்றானே
திருமங்கையாழ்வார்திருவடிகளேசரணம்
ஶ்ரீபுண்டரீகாக்ஷன்பெருமாள்திருவடிகளேசரணம்🙏🙏🙏
விந்தைகள் பல புரிந்த……
பல்லவி
விந்தைகள் பல புரிந்த செந்தாமரைக் கண்ணனை
எந்தையைக் கேசவனை வெள்ளறையில் துதித்தேன்
அனுபல்லவி
முந்தை வராக வடிவெடுத்து பூமியெனும்
பந்தைப் பிளந்துப் பிராட்டியை மீட்டவனை
சரணம்
பந்தார் விரலி பங்கயவல்லியின்
சிந்தை கவர்ந்தவனை சுந்தரனை மாலவனை
உந்திகமலப் பெருமானை மாதவனை
எந்தன் வினைப்பயனைக் களைந்தருள வேண்டி
Lord residing in Tiruvellarai, where the forest Mullai creeper grows upto the tip of the sugarcane, the flowers with pleasing smles pour nectar into the mouths of bees! Then, in the yore, you came as a board and lifted the lamenting Dame Earth from the deluge waters! Pray grace me
No comments:
Post a Comment