மெய்யர்க்கேமெய்யனாகும் விதியிலாவென்னைப்போல
பொய்யர்க்கே பொய்யனாகும்புட்கொடியுடையகோமான்
உய்யப்போர்முணர்வினார்கட்கு ஒருவனென்றுணர்ந்தபின்னை
ஐயப்பாடறுத்துத்தோன்றும் அழகனூரரங்கமன்றே
திருவரங்கநாதன்………
பல்லவி
திருவரங்கநாதன் திருவடி பணிந்தேன்
பெரும்பிணி பவக்கடல் நீங்கிடும் வரம் வேண்டி
அனுபல்லவி
திருவரங்க நாயகி உடனிருந்து காட்சி தரும்
திருமால் கேசவன் தீனருக்கருள் தரும்
சரணம்
மெய்யர்க்கே மெய்யனாகும் பெரிய பெருமாளவன்
பொய்யர்க்குப் பொய்யனாகும் புகழ் மிகு நீலவண்ணன்
தையல் திருமகளைத் திருமார்பில் வைத்திருக்கும்
பைந்நாகப் பாய் கிடக்கும் பாற்கடல் வாசன்
No comments:
Post a Comment