சாமளே மீனாக்ஷி
பல்லவி
சாமளே மீனாக்ஷி சந்ததம் துதித்தேன்
பாமரனெனையே ஆண்டருள்வாயே
துரிதம்
மாமறை நரர் சுரர் நான்முகனிந்திரன்
தாமரை நாபன் ஈசன் வணங்கிடும்
அனுபல்லவி
காமனையீன்ற கேசவன் சோதரி
சோமசுந்தரனின் மனங்கவர் நாயகி
சரணம்
சாமகானம் தனில் மனம் மயங்கிடும்
மாமதுரை நகர் போற்றும் மகாராணி
தாமரை மலரேந்துமழகு கரத்தாளே
தூமலர் தூவியுன் மலர்ப்பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment