வாசனே எனக்கருள…..
பல்லவி
வாசனே எனக்கருள இன்னுமென்ன தயக்கம் ( — ஶ்ரீநி)
கேசவனே உனையே அனுதினம் துதித்தேனே
அனுபல்லவி
பூசலாரைப் போலவே மனதில் கோயில் கட்டி
நேசமுடன் வணங்கி பூசைகள் செய்தேனே
சரணம்
நீச அரக்கர்களை நாசம் செய்தவனே
ஈசன் சிவனும் பிரமனும் நேசிக்கும்
மாசிலாதவனே மலைமேலிருப்பவனே
தேசுடைய திருமாலே வேங்கடவா கோவிந்தா
No comments:
Post a Comment